india

img

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடி பெயர் - மக்களவையில் விவாதிக்கக் கோரி நோட்டீஸ்

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர் இடம்பெற்றது தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
அமெரிக்க பாலியல் குற்றவாளியும், ஆட்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் பிரதமர் மோதியின் பெயர் மற்றும் அவரது இஸ்ரேல் பயணம் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கடந்த ஜனவரி 31-ஆம் தேதியன்று குற்றசாட்டை முன்வைத்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர் இடம்பெற்றது தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
நோட்டீஸில், "எப்ஸ்டீனால் குறிப்பிடப்பட்ட தகவல்களின் நம்பகத்தன்மையை ஒன்றிய அரசு சரிபார்த்ததா? எப்ஸ்டீன், இந்திய அரசுடனோ அல்லது மோடியுடனோ எப்போதாவது தொடர்பு கொண்டாரா?" என்று கேள்வி எழுப்பியதோடு, இது தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என குறிப்படப்பட்டுள்ளது.