states

img

கோவில் வளாகத்தில் கஞ்சா பயிரிட்டு விற்பனை – அர்ச்சகர் கைது!

தெலுங்கானாவில் கோவில் வளாகத்தில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வந்த கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம், பஞ்சகம் கிராமத்தில் கோவில் அர்ச்சகராக பணியாற்றி வந்த நரசய்யா மகாராஜ், கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட சிறப்புப் படை மற்றும் கலால் துறையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில், கோவில் வளாகத்துக்குள் மறைவாக கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் மொத்தம் 685 கஞ்சா செடிகள், 17.741 கிலோ கஞ்சா, கஞ்சா விதைகள் மற்றும் சுமார் ₹70 லட்சம் மதிப்புள்ள பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 நரசய்யா மகாராஜ், தன்னை ஆன்மீக குருவாக வெளிப்படுத்திக் கொண்டு, பக்தர்களின் நம்பிக்கையை பயன்படுத்தி கோவில் வளாகத்தை சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
கைது செய்யப்பட்ட அர்ச்சகர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பில் உள்ள பிற நபர்கள் குறித்து கலால் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.