உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல்
நாட்டின் மிக முக்கியமானப் பிரச்சனை மத நல்லிணக்கம் ஆகும். பிரதமர் முன்வந்து நாட்டில் மத நல்லிணக்கம் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மற்றொரு முக்கிய விவகாரம் நாட்டின் பொருளாதார ரீதியாக வலிமையாக்குவது; ஆனால் மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்காமலோ அல்லது மாறுபட்ட பார்வைகளை ஏற்காமலோ அதைச் செய்ய முடியாது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட்
மோடி அரசு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து வருகிறது. இருப்பினும் பொது மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகளைக் கையாள்வதில் இன்னும் திறமையற்றதாகவே இருக்கிறது. பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சனை வேலையில்லாத் திண்டாட்டம் ஆகும்.
மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே
மியா முஸ்லிம்கள் பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அசாமில் நடப்பவை இந்தியாவின் நிகழ்வுகளையும் சிந்தனைகளையும் பாதிக்கும் ; அதேபோல் இந்தியாவில் நடப்பவை அசாமையும் பாதிக்கும். நிலைமை இவ்வாறு இருப்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
சிவசேனா (உத்தவ்) கட்சி
சுநேத்ரா பவார் மகாராஷ்டிர துணை முதலமைச்சராகப் பதவியேற்பது குறித்து யாருக்கும் (அக்கட்சியின் எம்எல்ஏக்கள்) எந்தத் தகவலும் முன்கூட்டி அறிவிக்கவில்லை. கட்சிக்கு சம்மந்தம் இல்லாத அமித் ஷா மற்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், ஆகியோருக்கு மட்டுமே அது தெரிந்திருக்கக்கூடும்.
நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு ஞாயி றன்று முதல் அமலுக்கு வருகிறது. ஒன்றிய அரசு அறிவித்த கூடுதல் கலால் வரி விதிப்பால் பிப்ரவரி 1இல் இருந்து ரூ.2 முதல் ரூ.8.50 வரை சிகரெட்டின் அளவை பொறுத்து உயர்கிறது.
