states

img

தலித் மாணவர்களின் தற்கொலைக்காக மின்விசிறி வணிகத்தில் இறங்க போகிறார்களாம்! வெறுப்பைக் கக்கும் இந்துத்துவா ஊடகம்

தலித் மாணவர்களின் தற்கொலைக்காக  மின்விசிறி வணிகத்தில் இறங்க போகிறார்களாம்! வெறுப்பைக் கக்கும் இந்துத்துவா ஊடகம்

ஶ்ரீநகர் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் தகவல்களை செய்தியாக பதிவிடும் “இந்துத்துவா நைட் (hindutva knight)” என்ற சமூக ஊடகம், தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “இப்போது யுஜிசியே (பல்கலைக்கழக மானியக் குழு) ரத்து செய்யப்பட்டு விட்டது. அதனால் வளாகங்களில் (Campuses) இன்னும் அதிகமான ரோஹித் வெமுலாக்கள் (சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவரை போன்று நிறைய மாணவர்கள்) நமக்குத் தேவை. மேலும், நான் “சீலிங் பேன் (மின்விசிறி - தூக்கிட்டு தொங்க)” வணிகத்தைத் தொடங்கு கிறேன்” என அதில் தலித் மாணவர்களை தற்கொ லைக்கு தூண்டும் அளவிற்கு மிக மோசமான அளவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது, யுஜிசியையே ரத்து செய்யப்பட்டு விட்டதால் (ரத்து செய்யப்படவில்லை - கூறுகிறார்கள்) சாதியப் பாகுபாடு அதிகரித்து தலித் மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும். அதனால் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்ய நாம் மின்விசிறி வணிகத்தில் ஈடுபட போகிறோம் என இந்துத்துவா கும்பலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்ஜேடி கண்டனம் ஜம்மு-காஷ்மீரின் ஶ்ரீநகரை தளமாக கொண்டு இயங்கும் இந்த “இந்துத்துவா நைட்”  சமூக ஊடகத்தின் வெறுப்புக் கருத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன. “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி கூறுகையில், “உயர் சாதியைச் சேர்ந்த பயங்கரவாதியின் பதிவுகள் மோசமானதாக மாறிக்கொண்டு இருக்கிறது. நாட்டில் இருக்கும் தலித் குழந்தைகளுக்கு எதிரான கொலைச் சதித் திட்டங்கள் பகிரங்கமாகத் தீட்டப்பட்டு வரு கின்றன. பண்டையகாலம் முதலே இத்தகைய ‘சாதிப் பயங்கரவாதிகள்’ நமக்கிடையே வளர்ந்து வருகின்றனர். தலித் மக்களை அழிப்ப தன் மூலம் இவர்களது ‘சாதியற்ற சமூகம்’  உருவாகிவிடுமா?” என கேள்வி எழுப்பி கண்டித்துள்ளார்.