தமிழக வீராங்கனை கார்த்திகாவுக்கு பரிவட்ட மரியாதை
தமிழ்நாடு அணியில் அனைத்து வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடினர். அதிக ரைடுகள் சென்று 90-க்கும் மேற்பட்ட புள்ளி களை குவித்த வீராங்கனை கார்த்திகா தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் கபடி தொடரில் இந்தியாவிற்காக விளையாடி பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான முறையில் மரியாதை செய்யப்பட்டது. அதில், நமது தமிழக வீராங்கனை கார்த்திகாவுக்கு பரிவட்டம் அணிவித்து கௌரவித்து பாராட்டப்பட்டார். முன்னாள் இந்திய அணி வீராங்கனைகள் கார்த்திகாவுடன் உற்சாகமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சர்வதேச கபடி கூட்டமைப்பின் இயக்குநரான தேஜஸ்வி சிங் கெலாட், கார்த்திகாவின் அபார ஆட்டத்தை கண்டு பாராட்டி தனது கையால் விருது வழங்கி வாழ்த்தினார்.
