ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரைபகினா
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி யான ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் 114ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், சனியன்று மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா - தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் ரைபகினா பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரைபகினா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை கைப்பற்றினார். ரைபகினாவிற்கு இது 2ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இதற்கு முன் 2022ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டம் வென்றார். 3ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்கிய சபலென்கா அதிர்ச்சி தோல்வியுடன் 2ஆம் இடம் பிடித்துள் ளார்.
25ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா ஜோகோவிச்?
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொட ரின் ஆடவர் ஒற் றையர் பிரிவின் இறுதி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறு கிறது. இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலி டத்தில் உள்ள ஸ்பெயி னின் அல்காரஸ் - தரவரி சையில் 4ஆவது இடத்தில் இருப்பவரும், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான (24) செர்பி யாவின் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்துகின்ற னர். இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு (சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் - ஓடிடி) நடைபெறும் இந்த ஆட்டத் தில் வெற்றி பெற்றால் ஜோகோவிச் “சில்வர் கிராண்ட்ஸ்லாம் (25ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்)” என்ற மாபெரும் சாதனை க்குச் சொந்தக்காரராக உரு வெடுப்பார். இதனால் இறுதிப்போட்டியில் வெல்ல அவர் தீவிர முயற்சி மேற்கொள்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை கைப்பற்றி, 7ஆவது கிராண் ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்பில் அல்காரஸ் களமிறங்குகிறார். இரு வீரர்களும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கேரளாவில் சஞ்சு சாம்சன், தோனிக்கு பிரமாண்ட கட் அவுட் இந்தியா
- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி (சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டி) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனியன்று நடை பெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் முன்னாள் கேப்டன் தோனிக் காக திருவனந்தபுரத்தில் ரசிகர்கள் பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன், தோனி ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக (சென்னை) விளையாடி வரும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த சென்னை ரசிகர்கள் இந்த கட் அவுட்டை வைத்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
