முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்வாரா ரைபகினா?
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் போட்டி யான ஆஸ்திரேலிய ஓபன் தொட ரின் 114ஆவது சீசன் தற்போது இறு திக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் முத லிடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் சுவிட் டோலினாவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னே றினார். தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது அரையிறுதியில் தரவரிசை யில் 5ஆவது இடத்தில் உள்ள கஜ கஸ்தானின் ரைபகினா, தரவரிசை யில் 6ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலாவை 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வீழ்த்தி, 2ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில், சனியன்று நடை பெறும் இறுதி ஆட்டத்தில் பெலாரசின் சபலென்கா - கஜகஸ்தானின் ரைபகினா பலப்பரீட்சை நடத்துகின்றனர். 2 முறை (2023,2024) ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றுள்ள சபலென்கா 3ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கு கிறார். அதே போல 2023ஆம் ஆண்டு (சபலென்காவிடம் தோல்வி) நிகழ்ந்தது போல முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரைபகினா களமிறங்கு கிறார். இருவரும் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண போராடுவார்கள் என்பதால், சனி யன்று மதியம் 2:00 மணிக்கு நடை பெறும் ஆட்டம் இந்த இறுதி மிக மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. (சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் - ஓடிடி)
5.27 மணிநேரப் போராட்டம்
வெள்ளியன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ் பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கத்தில் அல்காரஸ் ஆதிக்கம் செலுத்தினாலும் (2 செட்களில்), அடுத்த 2 செட்களை கைப்பற்றி, ஜுவரேவ் பதிலடி கொடுத்தார். 4 செட் முடிவில் 2-2 என்ற செட் கணக்கில் இருவரும் சரிசமமாக இருந்த நிலையில், டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டைபிரேக்கரில் அல்காரஸ் ஆதிக்கம் செலுத்த, 6-4, 7-6 (7-5), 6-7 (3-7), 6-7 (4-7), 7-5 என்ற செட் கணக்கில் அவர் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். 5.27 மணிநேரம் போராடி ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இருந்து விடைபெற்ற ஜுவரேவுக்கு மைதானத்தில் பாராட்டுக்கள் குவிந்தன.
கேரளாவில் இன்று கடைசி டி-20 போட்டி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸி லாந்து கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடிவருகிறது. 5 போட்டிகளைக்கொண்ட டி-20 தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில், இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 5ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி (சுற்றுப்பய ணத்தின் கடைசி போட்டி) கேரள மாநி லம் திருவனந்தபுரத்தில் சனியன்று நடைபெறுகிறது. இந்த போட்டி எந்த அணிக்கும் முக்கியமானது அல்ல. சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டி யில் வெற்றியுடன் விடைபெற நியூஸி லாந்து அணி முயற்சிக்கும் என்ப தாலும், 4ஆவது போட்டியில் ஏற்பட்ட பெரும் தோல்விக்கு பதிலடி கொடுக் கும் முனைப்பில் இந்திய அணி தீவிர முயற்சியில் களமிறங்குகிறது என்ப தாலும் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.
இந்தியா - நியூஸிலாந்து நேரம்
: இரவு 7:00 மணி இடம் : கிரீன்பீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம், கேரளம் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)
