நூறுநாள் வேலையை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவ லகம் முன்பு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பி.கிருஷ்ணவேணி, வட்ட நிர்வாகிகள் விவே கானந்தன், விஜி, இந்திரா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் குறளரசன், மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணகி, மாவட்டத் தலைவர் அம்புரோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
