கோபி, ஜன.31- வாணிப்புதூர் பேரூராட்சிக்குட் பட்ட குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத் தால், அப்பகுதி பொதுமக்கள் புகை மூட்டத்தால் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வாணிப் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டுக ளில் சேகரிப்படும் குப்பைக்கழிவுகள், அப்பகுதியிலுள்ள மாயனப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மயானப்பகுதியில் குப்பை மலைபோல் தேங்கி வருகிறது. மேலும், குப்பை தேங்காமல் இருக்க அடையாளம் தெரியாத நபர்கள், அவ்வப்போது தீ வைத்து செல்வதால் நாள் முழுக்க புகை வெளியேறி வருகிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள், விவசாயத் தோட்ட உரிமையாளர்கள் பலரும் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்டவற்றால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், சனி யன்று குப்பைக்கிடங்கில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து சென்ற தால், அப்பகுதி முழுவதும் புகைமண்ட லமாக மாறியது. குப்பைக்கிடங்கில் பற் றிய தீ, அருகிலுள்ள விவசாயத் தோட் டத்திற்கு பரவுவதை கண்ட தோட்ட உரி மையாளர் அம்மாசை மற்றும் அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத்துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுக ளாக வாணிப்புதூர் பேரூராட்சி நிர்வா கம் குப்பைக்கழிவுகளை மயானத்தில் கொட்டி வருகிறது. இதுதவிர இறைச்சிச் கழிவுகளையும் கொட்டி செல்வதால் துர்நாற்றாம் வீசுகிறது. குப்பைக்கிடங் கில் குப்பை அதிகரிக்காமல் இருக்க, அவ்வப்போது தீ வைத்து செல்வதால், பல்வேறு நோய்களுக்குள்ளாகி வருகி றோம். குப்பைக்கிடங்கை வேறு இடத் திற்கு மாற்ற வேண்டி மாவட்ட நிர்வா கத்திடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த குப்பைக்கிடங்கில் ஏற்ப டும் தீ விபத்தால், அருகிலுள்ள விளை நிலங்களுக்கும் தீ பரவி, பயிர்கள் சேத மாகும் அபாயம் உள்ளது, என்றனர்.
