உயர் சிறப்பு மருத்துவ முகாம்
கோவை, ஜன.31- சின்னவேடம்பட்டியில் சனியன்று நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகா மில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்த னர். தமிழகம் முழுவதும் நலன் காக்கும் மருத்துவ முகாமின் ஒருபகுதியாக சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை கோவை மாநகராட்சி ேமயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இந்த முகாமில், 18 வகையான உயர் சிறப்பு சிகிச்சைகள் பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டன. இதில், பொது மருத்துவம், இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் சிகிச்சை. மகப்பேறு, குழந்தை கள் நலம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு. கண், பல், காது-மூக்கு-தொண்டை மற்றும் தோல் சிகிச்சை. எலும்பு முறிவு, நரம்பியல் மற்றும் மனநல மருத்துவம், சித்தா, ஆயுர் வேத மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், 18 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் 24 பயனாளிக ளுக்கு மருந்து பெட்டகங்களையும் வழங்கப்பட்டது. இந்நி கழ்வின்போது, மாநகராட்சி நகர் நல அலுவலர் மோகன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்றக்குழு தலைவர் வெ.இராம மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் திமுக நிர்வாகி முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
