பிப்.10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு
சேலம், ஜன.31- 19 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி வரும் பிப்.10 முதல் காலவரை யற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை யில் காலியாக உள்ள 1500 க்கும் மேற் பட்ட ஊராட்சி செயலாளர் பணியி டங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு தமிழ்நாடு உறு தியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத் தில் தேர்வு நிலை சிறப்பு நிலை மருத் துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள் ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண் டும். ஏழு ஆண்டு பணி முடித்துள்ள பணி மேற்பார்வையாளர்கள் அனை வரையும் இளநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடை பெறவுள்ளது. இப்போராட்டத்திற்கான ஆயத்த மாநாடு சனியன்று மாநிலம் முழுவ தும் நடைபெற்றது. அதன்ஒருபகுதி யாக சேலத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டிற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். இதில், தமிழ் நாடு ஊரக வளர்ச்சி ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் இரா.சுப்பி ரமணியம், மாவட்டச் செயலாளர் ஜான் ஆன்ஸ்டீன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விஜய அர்த்த நாரி, மாவட்டச் செயலாளர் பு. சுரேஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர். தருமபுரி தருமபுரி ஆர். டி நகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்சித்துறை அலு வலர்கள் சங்க அலுவலகத்தில் நடை பெற்ற ஆயத்த மாநாட்டிற்கு, அச் சங்க மாவட்டத் தலைவர் மு. முக மது இலியாஸ் தலைமை வகித்தார். இதில், மாநில துணைத்தலைவர் ச. இளங்குமரன், மாவட்டச் செயலாளர் வெ.தர்மன், பொருளாளர் கே.வினோத் குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். சுருளி நாதன், செயலா ளர் ஏ.தெய்வானை உள்ளிட்டோர் உரையாற்றினர். இம்மாநாட்டில் திரளானோர் பங்கேற்றனர்.
