games

img

விளையாட்டு

ஒரு நாட்டின் மீது மட்டும் ஏன் இவ்வளவு வெறுப்பு? நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ மீது நடவடிக்கை பாயுமா?

ரிச்சர்ட் கெட்டில்பரோ ஒரு புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் நடுவர் ஆவார். இங்கிலாந்து நாட்டின் முன்னாள்  கிரிக்கெட் வீரரான இவர், 2006இல்  நடுவர் பணியைத் தொடங்கினார். சிறப்பான பணி காரணமாக, 2011இல் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) “எலைட் பேனல் (சர்வதேச அங்கீகாரம்)” நடுவராகத் தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக ஐசிசியின் சிறந்த நடுவருக்கான ‘டேவிட் ஷெப்பர்ட்’ விருதை 2013, 2014, 2015 என 3  ஆண்டுகள் ரிச்சர்ட் வென்றுள்ளார். வைடு ஆனால் இந்திய அணிக்கெதிரான போட்டியின் போது ஏற்பட்ட சர்ச்சைக்கு பின்பே இவரை வெளியுலகிற்கு பிரபலமாக தெரியவந்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஒருநாள்  உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது, இந்திய வீரர் விராட் கோலி தனது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இந்தியா வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது. கோலி 97 ரன்களில் இருந்தார்.  ஆனால் வங்கதேச பந்துவீச்சாளர் நாசும் அகமது, கோலி  சதம் அடிப்பதைத் தடுக்கும் நோக்கில் ‘லெக் சைடில்’ பந்தை  வீசினார். அது ஒரு தெளிவான வைடு பந்து போலத்தெரிந்தது. நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ அதற்கு ‘வைடு’ கொடுக்க மறுத்துவிட்டார். பேட்டர் நகர்ந்து நின்றாலோ அல்லது பந்துவீச்சாளர் ஓடி வரும்போது பேட்டர் தனது நிலையை மாற்றினாலோ அது வைடு இல்லை என்ற புதிய விதிமுறைப்படி அவர் தீர்ப்பு வழங்கினார். இது கோலி சதம் அடிக்க உதவியாக அமைந்ததால் இந்திய ரசிகர்கள் இவரைப் பாராட்டினர். ஆனால் சர்வதேச அளவில் பேசும் பொருளானது. மனமாற்றம் இந்திய ரசிகர்களின் பாராட்டுக்களை தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, கடந்த 3 ஆண்டுகளாக நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ சமூகவலைத்தளங்களில் பாகிஸ்தான் வீரர்களை தாறுமாறாக விமர்சித்து வருகிறார். பாகிஸ்தான் அணி சர்வதேச போட்டிகளில் விளையாடினாலும் சரி, அந்த அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடினாலும் சரி தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். இவர் ஏன்  பாகிஸ்தான் அணியையும், வீரர்களையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார்? என்பது தொடர்பாக இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இந்திய அணியின் ரசிகர்களின் அன்பால் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ இவ்வாறு செய்யலாம் என்று சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், சர்வதேச நடுவராக இருந்து கொண்டு பாகிஸ்தான் அணியை மட்டும் விமர்சிப்பது சரியல்ல. முக்கியமாக இது நடு வருக்கான வேலை அல்ல என்பதை அவர் உணர வில்லை. அதனால் ஐசிசி சார்பில் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ மீது நடவடிக்கை பாயுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் உலகக்கோப்பையில் பங்கேற்காது என்ற புரளியை பரப்பியவரும் இவரே

அடுத்த மாதம் இந்தியா - இலங்கையில் கூட்டாக டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முன்பு இந்தியா பாதுகாப்பு பிரச்சனையை கார ணம் காட்டி, பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல மறுத்ததை போன்று, தற்போது வங்கதேசமும் அதே கருத்தைக் கூறி இந்தியாவிற்கு வராமல் டி-20 உலகக்கோப்பையை புறக்கணித்தது. இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்திற்கு ஆதர வாக, பாகிஸ்தான் அணியும் உலகக்கோப்பையை புறக்கணிக் கிறது என்றும், அவ்வாறு புறக்க ணித்தால் பாகிஸ்தான் அணிக்கு அப ராதம் விதிக்கப்படும்; சர்வதேச மற்றும் கண்டங்களுக்கு இடையி லான தொடர்களில் இருந்து பாகிஸ் தான் இடைநீக்கம் செய்யப்படும் ; பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர் களுக்கான தடையின்மைச் சான்றி தழை திரும்பப் பெறுவோம் என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி தலைவர் ஜெய் ஷா (அமித் ஷா மகன்) எச்சரித்ததாக நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ மூலமாக செய்திகள் வெளியாகின. உடனே கோடி மீடியா ஊடகங்கள் இதனை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. ஆனால் உண்மையில் இது  போலிச் செய்தியாகும். ஊடகங்களில் செய்திகள் வெளியான அன்றைய தினமே, பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் உலகக்கோப்பையில் பங்கேற்காது என்ற புரளியை பரப்பியவர்களில் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.