states

img

பிரதமர் மோடி செல்லவிருக்கும் “தேரா பால்லனுக்கு” வெடிகுண்டு மிரட்டல் பிரதமர் மோடி

பிரதமர் மோடி செல்லவிருக்கும் “தேரா பால்லனுக்கு” வெடிகுண்டு மிரட்டல் பிரதமர் மோடி

ஞாயிறன்று (பிப்., 1) குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள “தேரா சச்கண்ட் பால் லன்” புனித தலத்தி ற்கு செல்லவுள்ள தாக செய்திகள் வெளியாகின.  இந்நிலையில், சனியன்று தேரா பால்லன் மற்றும் ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிக ளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு மட்டுமே மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருந்தாலும், அந்தச் செய்தியின் உள்ளடக்கத்தில் “தேரா பால்லன்” அமைப்பிற்கு நேரடியாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடு முறை என்பதால் பள்ளிகளில் மாண வர்கள் யாரும் இல்லை. எனினும் மிரட்ட லைத் தொடர்ந்து காவல்துறையினர் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின ருடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குப் பின்பு இது  புரளி என தெரியவந்தது. பிரதமர் மோடி செல்லவிருக்கும் “தேரா பால்லனு க்கு” வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தையடுத்து, பஞ்சாப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.