tamilnadu

img

ஒன்றிய பட்ஜெட் 2026-27 கூட்டுக் களவாணிகளின் வேட்டை

ஒன்றிய பட்ஜெட் 2026-27 கூட்டுக் களவாணிகளின் வேட்டை

2026-27 நிதியாண்டிற்கான மொத்த பட்ஜெட் செலவினம் ₹50.65  லட்சம் கோடி. கட்டமைப்பு வசதிகளுக்காக ₹12.2 லட்சம்  கோடி ஒதுக்கீடு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பதில் “விக்சித் பாரத் - ரோஸ்கார் அஜீவிகா  மிஷன்” அறிமுகம். செமிகண்டக்டர் உற்பத்திக்கு ₹40,000 கோடி மற்றும் பயோ-பார்மா துறைக்கு ₹10,000 கோடி ஒதுக்கீடு. 7 புதிய அதிவேக இரயில் வழித்தடங்கள் மற்றும் கிழக்கு-மேற்கு தொழில் வழித்தடங்கள் அறிவிப்பு. ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல்; திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் காலநீட்டிப்பு. புற்றுநோய் மருந்து களுக்கான சுங்க வரிநீக்கம்; 3 புதிய ஆயுர்வேத  கல்வி நிறுவனங்கள். அந்நிய நேரடி முதலீடு (FDI) வரம்பு அதிகரிப்பு. வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்திற்கான வரி (TCS) 5%-லிருந்து  2%-ஆகக் குறைப்பு. லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி நீக்கம் மற்றும் 2035 வரை அணுமின் நிலையப் பொருட்களுக்கு  வரி விலக்கு.

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ₹16.7 லட்சம் கோடி கடன் வாங்கத் திட்டம். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் MGNREGA எனும் சட்டபூர்வ உரிமை ரத்து செய்யப்பட்டு, அரசின் விருப்பத் திட்டமாக மாற்றப்பட்டது. தனிநபர் வருமான வரி அடுக்குகளில் (Slabs) எந்த மாற்றமும் இல்லை; நடுத்தர வர்க்கத்திற்கு நிவாரணம் இல்லை. மாநிலங்களின் 50% வரிப்பகிர்வு கோரிக்கை நிராகரிப்பு; 41% மட்டுமே தொடர்கிறது. கல்வி, சுகாதாரத்தில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பது சாமானியர்களுக்கான சேவையை  விலை உயர்த்தும். பெட்ரோல், டீசல் அல்லது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க நேரடித் திட்டங்கள் இல்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை எனும் வாக்குறுதி குறித்த தரவுகள் இல்லை; உற்பத்தித் துறை வீழ்ச்சிக்குத் தீர்வில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) சட்டபூர்வமாக்கப்படவில்லை; உர மானியக் குறைப்பு அச்சம். தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் நீண்டகால இரயில்வே கோரிக்கைகள் நிராகரிப்பு. பங்குச் சந்தையில் F&O மீதான வரி உயர்வு சிறு முதலீட்டாளர்களைப்  பாதிக்க வாய்ப்பு.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறை யாக ஞாயிற்றுக்கிழமையன்று தாக்கல் செய்யப் பட்டுள்ள 2026-27 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட், தேசத்தின் பொருளாதார திசைவழியை உழைக்கும் மக்களிட மிருந்து விலக்கி, முற்றாக பெருநிறுவனங்களின் அளவற்ற லாபக் குவிப்பை நோக்கித் திருப்பியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், ₹50.65 லட்சம் கோடி மதிப்பிலான செலவினங்களைக் கொண்டிருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் சாமானிய மக்களின் அடிப்படை நலன்கள் பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளன. குறிப்பாக, நாட்டின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ₹16.7 லட்சம் கோடி கடன் வாங்க அரசு திட்ட மிட்டுள்ள நிலையில், இந்தச் சுமை மறைமுகமாக மக்கள் மீதே சுமத்தப்பட உள்ளது.   (முழு விபரம் : 2)