tamilnadu

img

ஒன்றிய பட்ஜெட் 2026 முக்கிய அம்சங்கள் ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்கி சமாளிக்க மோடி அரசு திட்டம்

ஒன்றிய பட்ஜெட் 2026 முக்கிய அம்சங்கள் ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்கி  சமாளிக்க மோடி அரசு திட்டம்

 

புதுதில்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி  28 அன்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கி யது.  ஆண்டுதோறும் பிப்ரவரி 1ஆம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம் என்ற நிலை யில், 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளு மன்றத்தில் ஞாயிறன்று காலை 11.01 மணிக்கு தாக்கல்  செய்யப்பட்டது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தாக்கல் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9ஆவது  பட்ஜெட் இதுவாகும். புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி  நாளிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன் என்ற உரை யுடன் பட்ஜெட் வாசிப்பை தொடங்கிய நிர்மலா சீதா ராமன் கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்: *    பயோ பார்மா சக்தி திட்டத்திற்காக ரூ.10,000 கோடி  ஒதுக்கீடு *    செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.0 திட்டம் அறிமுகப்  படுத்தப்படும். செமி கண்டக்டர் துறையை ஊக்கு விக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு. *    நாடு முழுவதும் பிரத்யேக ரசாயன பூங்காக்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும். *    அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய வழித்தட  திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, கேரளாவுக்கு அறிமுகபடுத்தப்படும். *    விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். *    நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித் தடங்கள் அமைக்கப்படும். காந்தி பெயரைக் கூறி சமாளிப்பு கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தேசிய ஊரக  வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்த மகாத்மா காந்தி  பெயரை நீக்கி, அந்த திட்டத்திற்கு விபி ஜி ராம் ஜி என  பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு கிளம்பின. இதனை திசைதிருப்ப  பட்ஜெட்டில் காதி, கைத்தறி, கைவினைப் பொருட் களை வலுப்படுத்த ‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’  என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. *    சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு. *    சர்வதேச கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்  களுக்கு இறக்குமதி வரி கிடையாது (ஆனால் பாது காப்பு திட்டங்கள் பற்றி வாய் திறக்கவில்லை). *    சர்வதேச அளவில் ஜவுளித்துறையில் இந்தியா போட்டி போட புதிய திட்டங்கள் ; ஜவுளித்துறை சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க, தொழிற்துறை,  கல்வித்துறை இடையே ஒருங்கிணைப்பு மேற்  கொள்ளப்படும். புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள்  அமைக்கப்படும். *    இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி,  பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம். 7 அதிவேக ரயில்தடங்களுக்கு மட்டுமே 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 7 அதிவேக ரயில்தடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மிக  குறைந்த தூரங்களுக்கு மட்டும் தான். *    மும்பை - புனே, புனே ஹைதராபாத், ஹைதரா பாத் - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை, சென்னை -  பெங்களூரு, புதுதில்லி - வாரணாசி, வார ணாசி - சிலிகுரி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் 7 அதிவேக ரயில் பாதைகள். *    முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில்  நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்  படும். *    புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்; இதற்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு. *    கோவில் நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். தமிழ்நாட்டின் ‘தோழி’ விடுதியை  காப்பி அடித்த மோடி அரசு தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் 19 தோழி விடுதிகள் நிறுவப்பட்டு, 1,824 பணிபுரியும் மகளிர் பயன டையும் வகையில் தோழி விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் 12 புதிய தோழி விடுதி கள் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஏற்கெனவே அடிக்கல் நாட்டியுள்ளார். இதனை பின்பற்ற நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மகளிர்  விடுதி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். *    உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருந்து கள் ஆராய்ச்சி மையம் குஜராத் மாநிலம் ஜாம்நக ரில் அமைக்கப்படும். *    3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்  படும். *    வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்  சந்தையில் முதலீடு செய்யலாம். *    இந்தியாவில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள். 10% ஆக உள்ள முதலீடு வரம்பு. 24% ஆக அதிகரிக்கப்படுகிறது. *    தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச் சார மையம் அமைக்கப்படும் *    பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் படும்.  *    பொதிகை மலை, இமாச்சல், ஜம்மு-காஷ்மீரில் டிரக்கிங் (மலையேற்றம்) சுற்றுலாவை ஊக்கு விக்க நடவடிக்கை எடுக்கப்படும் *    கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்கு விக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தென்னை  உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம் *    உலகத்தரம் வாய்ந்த ஆன்மிகச் சுற்றுலா உள்கட்ட மைப்பு மற்றும் தியான மையங்கள் அமைக்கப் படும் குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது *    மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41 சதவீதமாகவே  தொடரும்; அதே போல மாநிலங்களுக்கான நிதிப்  பகிர்விற்கு ரூ.1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும். *    ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு  வருகிறது. *    திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய டிசம்பரிலிருந்து மார்ச் வரை கால நீட்டிப்பு  செய்யப்படுகிறது. *    வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கி னாலோ 100% அபராதம் விதிக்கப்படும். *    வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்க ளுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது. *    வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து வரி குறைப்பு. *    தனிநபர் வருமான வரியில் இந்த ஆண்டு எந்த மாற்ற மும் இல்லை. *    மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப் படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரி யிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது *    காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப் பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய  சலுகை. *    அனிமேஷன், விஎப்எக்ஸ், கேமிங் காமிக்ஸ் உள்  ளிட்ட திரைத்துறை சிறப்பு அம்சங்கள் நாடு முழு வதும் உள்ள 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரி களில் அமைக்கப்படும். மருத்துவத்திலும் தீவிர தனியார்மயம் *    புற்றுநோய் மருந்துகளுக்கான இறக்குமதி வரி  குறைப்பு. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப் படும் 17 மருந்துகளுக்கு சுங்க வரி நீக்கம். *    நாடு முழுவதும் 5 மருத்துவ மையங்கள் உருவாக்கப்  படும். *    தனியார் துறையோடு இணைந்து நாடு முழவதும் மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும். *    ஆயுர்வேத மருத்துவத்துக்கு நாடு முழுவதும் 3 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.   *    மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5 சதவீததில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடன் *    பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில்  அமைந்த பிறகு 25 கோடி மக்கள் வறுமையிலி ருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டு, 2026-27 நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. *    கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக வெளி நாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஆதார  வரி (TCS), 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும் *    டேட்டா சென்டர் டெவலப்பர் நிறுவனங்களுக்கு 2047ஆம் ஆண்டு வரை வரி விடுமுறை (TAX HOLIDAY) அளிக்கப்படும் *    மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில்  நடவடிக்கை எடுக்கப்படும். லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி இல்லை *    பங்குச் சந்தையில் நிலவும் அதிகப்படியான ஊக  வணிகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) மீதான வரிகள் உயர்த்தப்படுகிறது *    பியூச்சர்ஸ் மீதான வரி 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாகவும். ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான  வரி 0.1 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. *    2025ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறை 4.5-க்கும் கீழ் குறைக்கப்பட்டது. *    2026-27ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட  மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை 4.3 ஆக இருக்கும்  என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது *    ரூ.5,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் பொரு ளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்படும். *    2035ஆம் ஆண்டு வரை அணுமின் நிலையத்திற்குத்  தேவையான பொருள்களுக்கு வரி விலக்கு. *    மைக்ரோவேவ் ஓவன்களுக்கு இறக்குமதி வரியில்  இருந்து விலக்கு.