உழைக்கும் மக்கள் மீதான கொடிய தாக்குதல்
ஒன்றிய பட்ஜெட், உழைக்கும் மக்கள் மற்றும் தேசிய நலன்களைப் பலிகொடுத்துவிட்டு, ஒரு சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு கொண்டுள்ள கண்மூடி தனமான விசுவாசத்தை அம்பலப்படுத்துகிறது. வரு வாய் பெருமளவு சுருங்கி யுள்ளதை எண்கள் வெளிப் படுத்துகின்றன; இதனை ஈடுகட்ட ஊரக வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் உள்ளிட்ட முக்கி யத் துறைகளுக்கான செலவினங்களை அரசு ஒட்டு மொத்தமாக வெட்டியுள்ளது. உரங்கள், உணவு மற்றும் பெட்ரோலிய மானியங்களில் மேலும் வெட்டுக்களைப் பரிந்துரைப்பதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் விவ சாயிகள் மீது ஒரு பயங்கரத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. விவசாயத் துறை ஏற்கனவே விலை வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், அத்துறைக்கு ஆதரவு அளிப்பதாக எவ்வித பாசாங்கும் கூட இம்முறை இல்லை. மேலும், நிதிசார் கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைக்கும் வகையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு பல லட்சம் கோடிகள் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி (GST) மூலமாகவும், ‘விபி ஜி ராம் ஜி’ (VB-G RAM G) போன்ற திட்டங்களின் செலவுச் சுமையை மாநிலங்கள் மீது சுமத்துவதன் மூலமும் மாநிலங்கள் நிதி ரீதியாக நெரிக்கப்படுகின்றன. இந்த பட்ஜெட் பொருளாதார ஏற்றத்தாழ்வை மோசமாக்கி, இந்தியப் பொருளா தாரத்தைச் சூழ்ந்துள்ள நெருக்கடியைத் தீவிரப்படுத்தும். வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக உழைக்கும் வர்க்கத்தினர் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகும். — எம்.ஏ. பேபி, பொதுச் செயலாளர், சிபிஐ(எம்)
