தோல்வி உறுதி என்பதால் தமிழ்நாட்டைப் புறக்கணித்த பாஜக அரசு
எப்படியும் தோல்வி உறுதி என்பதால் தமிழ்நாட்டை மீண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணித்துள்ளது. தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களும் இல்லை; ஏற்கனவே வரவேண்டிய ஜல் ஜீவன் (Jal Jeevan) மற்றும் கல்வி நிதியும் இல்லை; அட, வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் கூட இம்முறை பட்ஜெட் உரையில் இல்லை! அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கேட்டால், ஏதோ 5 ஆண்டுத் திட்டம் போல வாசித்திருக்கிறார்கள். மொத்தத்தில், 2026 ஒன்றிய பட்ஜெட் என்பது ஒரு ஏமாற்ற பட்ஜெட். தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. — மு.க.ஸ்டாலின், முதல்வர், தமிழ்நாடு அரசு
