india

img

அமித்ஷாவின் பேச்சுக்கு எதிராக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

அம்பேத்கர் குறித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
"அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என சர்ச்சைக்குரிய வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் நேற்று பேசியிருந்தார். இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.