நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பதவி விலக வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முழக்கம் எழுப்பினர். இதன் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைப்பு.