districts

img

தளி பேரூராட்சி துணைத்தலைவர் மீது சாதி வெறி தாக்குதல்!

மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவரும். தளி பேரூராட்சி நிர்வாகத்தின் துணைத்தலைவரான கோ.செல்வன் மீது, பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து சாதி ரீதியான தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தளி பேரூராட்சியில் துணை தலைவராகவும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளராக இருப்பவர் கோ.செல்வன். இவர், புதனன்று தளி பேரூராட்சியில் நடைபெறும் வேலைகள் குறித்து அலுவலக ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பேரூராட்சி அலுவலகத்திற்குள் வந்த சின்னு (எ) கருணாகரன் என்பவர், தளி பேரூராட்சியில் உள்ள வேலைகளைச் செய்ய நீ யார் என செல்வனை பார்த்துக் கேட்டு, சாதியை கூறி, கொலை மிரட்டல் விடுத்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவத்தை கண்ட பேரூராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதனையடுத்து, தளி காவல் நிலையத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெகதீசன், மாவட்டக்குழு உறுப்பினர் கனகராஜ், மலைக்கமிட்டி உறுப்பினர்கள் மணிகண்டன், குப்புசாமி, செந்தில்குமார் தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருண்பிரகாஷ் உள்ளிட்ட திரளான மலைவாழ் மக்கள் தாக்குதலுக்கு உள்ளான செல்வம் ஆகியோர் புகார் அளித்தனர்.

இது குறித்து கோ.செல்வன் கூறுகையில் தளி போரூட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட வேலைகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகளிடம் அலுவலகத்தில் பேசிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த சின்னு (எ) கருணாகரன் என்பவர்  தளி பகுதியில் வேலை செய்ய நீ யாருடா என்றும் மேலும் பல தாகாத வார்த்தைகளை கூறி என்னை கடுமையாக தாக்கினார். என் மீது சாதிய ரீதியாகவும் அரசு வேலைகளை செய்யவிடாமல் கடுமையாக தாக்கியவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தளி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளேன். மேலும் எனக்கும் எனது குடும்பத்திற்கும் உரிய பாதுகாகப்பு தர வேண்டும் என்றார்.