india

img

6,260 மெட்ரிக் டன் ஆக்சிஜன்..... நாடு முழுவதும் விநியோகம்....

புதுதில்லி:
நாடு முழுவதும் திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய ரயில்வே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய ரயில்வே இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு 396 டேங்கர்களில் சுமார் 6,260 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது.

ஒரே நாளில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வாயிலாக 800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டது.இதுவரை 100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்களது பயணத்தை முடித்துள்ளன.ஆக்சிஜன் வேண்டி கோரிக்கை எழுப்பும் மாநிலங் களுக்கு, குறுகிய காலத்தில் அதிக அளவில் திரவ மருத்துவ ஆக்சிஜ னைக் கொண்டு சேர்ப்பதில் இந்தியரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.இதுவரை மகாராஷ்டிராவிற்கு 407 மெட்ரிக் டன்னும், உத்தரப் பிரதேசத்திற்கு 1680 மெட்ரிக் டன்னும், மத்தியப் பிரதேசத்திற்கு 360மெட்ரிக் டன்னும், ஹரியானா விற்கு 939 மெட்ரிக் டன்னும், தெலுங்கானாவிற்கு 123 மெட்ரிக் டன்னும், ராஜஸ்தானிற்கு 40 மெட்ரிக் டன்னும், கர்நாடகாவிற்கு 120 மெட்ரிக் டன்னும், தில்லிக்கு 2404 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.