india

img

இந்தியாவில் புதியவகை ஒமிக்ரான் எக்ஸ்இ தொற்று உறுதி  

ஒமிக்ரான் வகை கொரோனாவை விட வேகமாக பரவும் புதியவகை மாறுபட்ட எக்ஸ்இ தொற்று, இந்தியாவில் முதன்முதலாக மும்பையில் ஒருவருக்கு இன்று கண்டறியப்பட்டுள்ளது.  

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியது.  

இந்நிலையில் சுமார் 376 பேருக்கு சோதனை மேற்கொண்டதில் 230 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். இந்த 230 பேரில் 228 மாதிரிகள் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்று மற்றொன்று கப்பா தொற்று, மற்றொன்று எக்ஸ்இ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை தொற்று உறுதியானவர்களுக்குத் தீவிர பாதிப்பும் எதுவும் இல்லை என கமிஷ்னர் இக்பால் சிங் சஹால் கூறியுள்ளார்.  

முன்னதாக ஒமிக்ரான் வகையின் துணை திரிபான பிஏ.2வை விட புதிதாக உருவாகியுள்ள எக்ஸ்இ கொரோனா 10 சதவீதம் அதிவேகமாக பரவலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.