ஒமிக்ரான் தொற்று காரணமாக மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் என்ற புதிய வகை தொற்று உலகமெங்கும் பரவி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
அந்த வகையில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லைப்புறங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள்,விழா, கூட்டம் கூடுதல் ஆகிய செயல்பாடுகள் திறந்தவெளியிலோ அல்லது மூடப்பட்ட உள் அரங்கத்திலோ நடைபெறுவது தடை செய்யப்படுகிறது என ஆணையர் இக்பால் சிங் சாஹல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு டிசம்பர் 25 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.