கொல்கத்தா:
பல ஆயிரம் கோடி ரூபாய்தொடர்புடைய, ‘சாரதா’ நிதி நிறுவன மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின், 3கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்க கறுப்புப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் குணால் கோஷ், அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் சதாப்தி ராய் (சாரதா நிறுவனத்தின் விளம்பரத் தூதுவர்) மற்றும் சாரதா குழும நிறுவனங்களின் இயக்குநர் தீப்ஜானி முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்துகள் அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்டன.சாரதா நிதி மோசடி வழக்கில் இதுவரையில் ரூ. 600 கோடி மதிப்பிலானசொத்துகள் முடக்கப்பட் டுள்ளன.சாரதா நிதி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் கடந்த 2013- முதல் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.