india

img

செப் 6 - 10 வாலிபர் சங்கம் தொடர் சத்தியாகிரகம்... ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு....

திருவனந்தபுரம்:
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநில செயலாளர் ஏ.ஏ.ரஹீம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.எரிபொருள் விலை உயர்வு, கடுமையான வேலையின்மை மற்றும் தடுப்பூசிகள் வழங்குவதில் உள்ள திறமையின்மைக்கு எதிராக ஊராட்சி ஒன்றிய மையங்களில் செப்டம்பர் 6 முதல் 10 வரை தொடர் சத்தியாகிரகம் ஏற்பாடு செய்யப்படும். மத்திய அரசு அலுவலகங்கள் முன் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை இந்த சத்தியாக்கிரகம் நடைபெறும். 10 ஆம் தேதிமாலை 4 மணிக்கு 10 நிமிட வாகனஇயக்க நிறுத்தத்துடன் சத்தியாகிரகம் நிறைவடையும்.மாநில தொடர் சத்தியாகிரகத்தை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ் ணன் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை10 மணிக்கு ராஜ்பவனுக்கு முன்பாக துவக்கி வைக்கிறார். இறுதியாக செப்டம்பர் 10 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொறுப்பு செயலாளர் விஜயராகவன் தொடங்கி வைக்கிறார்.

ஒன்பதாம் தேதி வாகன நிறுத் தத்தை ஊக்குவிக்கும் வகையில் போராட்ட மையங்களில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்படும். தொடர் சத்தியாக்கிரக செய்தியாக ஒரு வாரம் விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். பிரதமரிடம் மனு அளிக்கசெப்டம்பர் முதல் நாளன்று பெட் ரோல் பம்புகள் முன் கையெழுத்து சேகரிக்கப்படும். செப்டம்பர் ஒன்று முதல் ஐந்து வரை சைக்கிள் பிரச்சாரம் நடைபெறும்.செய்தியாளர் சந்திப்பில் மாநிலத் தலைவர் எஸ்.சதீஷ், மத்திய குழுஉறுப்பினர் வி.கே.சனோஜ் மற்றும் மாவட்ட செயலாளர் கே.பி.பிரமோஷ்ஆகியோர் கலந்து கொண்டனர்.

387 மையங்களில்  ‘விடுதலைச் சுடர்’
மலபார் கிளர்ச்சியில் விவாதத்தை எழுப்பும் சங் பரிவாரத்தை அம்பலப்படுத்தி பிரச்சாரம் ஏற்பாடு ய்யப் படும். மலபார் கிளர்ச்சியின் 100 ஆவதுஆண்டு விழா என்பதால், 100 கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்படும். தியாகிகள் பட்டியலில் இருந்து 387 பேர் விலக்கப்படுவதை எதிர்த்து ‘போராடி வீழ்ந்தவர்களுடையதே வரலாறு, மன்னிப்புக் கோரியவர்களது அல்ல’ என்கிற முழக்கத்துடன் மலப்புறம் மாவட்டத்தில் 387 மையங்களில் “விடுதலைச் சுடர்” ஏற்றப்படும் என்றுஏ.ஏ.ரஹீம் கூறினார்.

                                                 ***************

மலபார் கிளர்ச்சியின் சாரம் ஆங்கிலேய எதிர்ப்பே.... சபாநாயகர் எம்பி ராஜேஷ் பேச்சு

 மலபார் கிளர்ச்சியின் சாரம்ஆங்கிலேய எதிர்ப்பு என்று சபாநாயகர் எம்பி ராஜேஷ் கூறினார். விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் மலபார் கிளர்ச்சி என்று அவர் கூறினார்.வாரியம்குன்னன் நடத்தியது விடுதலைப் போராட்டம் இல்லை என்றால் எது விடுதலைப்போராட்டம் என்றும் சபாநாயகர் கேட்டார்.1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் மலபார் கிளர்ச்சி. வாரியம் குன்னன் ஆங்கிலேய அரசாங்கத்தின் முதன்மையான எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்றும், கேரளாவில் விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலில்இருந்து மலபார் கிளர்ச்சியாளர் களை நீக்குவதைக் கொண்டாடும் ஒரு குழு இருப்பதாகவும் சபாநாயகர் கூறினார்.ஜவஹர்லால் நேருவையும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருந்து நீக்கும் முயற்சிநடக்கிறது. வகுப்புவாத கலவரங்களுக்கு செல்லக்கூடாது என்ற உறுதியுடன் மலபார் கிளர்ச்சி வழிநடத்தப்பட்டது. தனிப்பட்ட சில சம்பவங்களைபெரிதுபடுத்தி மலபார் கிளர்ச்சியை வகுப்புவாதமாக்கும் முயற்சி நடப்பதாகவும் சபாநாயகர் எம்பி ராஜேஷ் தெளிவுபடுத்தினார்.