india

img

இஸ்லாமியர்களின் கடைகளில் இந்துக்கள் இறைச்சி வாங்க கூடாது என பஜ்ரங் தள் அமைப்பு பிரச்சாரம்  

இஸ்லாமியர் கடையில் இந்துக்கள் யாரும் இறைச்சிகளை வாங்கக்கூடாது என பஜ்ரங் தள் அமைப்பினர் பிரச்சாரம் செய்தது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் அண்மைக்காலமாக இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இந்துத்துவ கும்பல் நடந்துகொண்டு வருகிறது. மேலும், இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே மத மோதலை ஏற்படுத்தவும் இந்த கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் கடைகளில் இந்துக்கள் யாரும் இறைச்சி வாங்கக்கூடாது என பஜ்ரங்தள் அமைப்பினர் துண்டுப் பிரசுரங்களை வீதி வீதியாகக் கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளனர். மேலும், பத்ராவதி பகுதியில் நடந்த பிரச்சாரத்தின்போது இறைச்சிக் கடை வைத்திருந்த இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஷிவமோகா மாவட்டத்தில் உணவுக்கடை வைத்திருந்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர்.