india

img

ஜம்மு-காஷ்மீரில் வெடி விபத்து - 9 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் போலீசார் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் இணைந்து ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வெடிபொருட்கள் திடீரென வெடித்ததால் தடயவியல் குழுவினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு–காஷ்மீர் டிஜிபி நலின் பிரபாத், “இது முற்றிலும் தற்செயலான வெடி விபத்துதான். இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை” என்று தெளிவுபடுத்தினார்.