மதச்சார்பற்ற சக்திகளுக்கு அபாயச் சங்கு
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்திய ஜனநாயக அரசியலின் போக்கில் ஒரு குறிப்பிடத் அபாயச் சங்கை ஒலித்துள்ளது. கருத்துக் கணிப்பு களைத் தாண்டி பாஜகமற்றும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி சுமார் 195 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றிருப்பது, வெறும் தேர்தல் வெற்றி அல்ல; இது நவீன தாராளமய மற்றும் இந்துத் துவ சக்திகள், மக்களின் அடிப்படை வறுமை யையும் உடனடித் தேவைகளையும் மூலதன மாக்கி பெற்ற “வியூக” வெற்றியாகும்.
இந்தத் தேர்தல் முடிவுகள், இடதுசாரி கட்சிக ளும் ஜனநாயக சக்திகளும் உறுதியாக நம்பும் சமூக நீதி, உழைக்கும் மக்களின் நலன், மதச் சார்பின்மை ஆகிய கொள்கைகளுக்கு விடுக் கப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாகும். ஆளும் வர்க்கத்தின் மிக நுட்பமான சூழ்ச்சியை இந்தத் தேர்தல் வெளிப்படுத்துகிறது.
ஒரு காலத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களின் மக்கள் நலத் திட்டங்களை (இல வசங்களை) ‘சோம்பேறிகளை உருவாக்கும் திட்டம்’ என்று ஏளனம் செய்த பாஜக, அதே மக்கள் நலத் திட்டங்களைத் தனது பிரதான தேர்தல் ஆயுதமாகக் கையாண்டது. இடது சாரிப் பார்வையில், இந்த ‘இலவசங்கள்’ என்பவை உண்மையில் நிரந்தரமான கட்ட மைப்பு மாற்றங்களையோ, வேலைவாய்ப்புக ளையோ, அல்லது வறுமையை ஒழிக்கும் பொரு ளாதாரத் திட்டங்களையோ கொடுப்பதில்லை.
இந்த தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான இந்தியா கூட்டணி, ஏற்கெனவே வைத்திருந்த 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்துள்ளது. பிரச்சாரத்தின் போது இருந்த மக்களின் அமோக வரவேற்பு வாக்குகளாக மாறாமல் போனது ஏன் என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் விடை காணவேண்டியுள்ளது. முதல்வர் வேட்பாளர் என தேஜஸ்வி கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் அறிக்கை தாமதமாக வெளியிடப்பட்டதும் கூட பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளே (காங்கிரஸ், ஆர்ஜேடி) பிற கட்சிகளுக்கு எதி ராக வேட்பாளர்களை நிறுத்தி ‘நட்புப் போட்டி’ என்று அறிவித்தது, கூட்டணியின் ஒற்றுமையை யும், கொள்கை உறுதியையும் கேள்விக்குறி யாக்கி, அடித்தட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை யின்மையை விதைத்துள்ளது. இது, மதச்சார் பற்ற சக்திகள் அடித்தளத்தில் தங்கள் அமைப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்துகிறது.
இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவால் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத ஒரே மாநிலமாக பீகார் இருப்பதால், இந்த வெற்றி அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. நிதிஷ் குமாரின் ஐஜதளம் ஆதரவுடன் மத்திய ஆட்சி யைத் தக்கவைக்கும் நிலையில், பாஜக-வுக்கு நிதிஷ்குமாரைச் சமாளிப்பதும், அவர் மீது அரசி யல் மேலாதிக்கம் செலுத்துவதும் ஒரு பெரிய சவாலாக இருக்கும். எனவே அவரது கட்சியை விழுங்கவே முயற்சிக்கும்.
ஒட்டுமொத்தத்தில் இது பாஜக போட்ட கணக்கு களுக்கு வெற்றி; ஆனால், பீகார் மக்களுக்கு தோல்வி!
