india

img

7 மாநிலங்கள் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது!

7 மாநிலங்களில் உள்ள 8 சட்டமன்ற  தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 2 தொகுதிகளில் பாஜவும், தலா ஒரு தொகுதியில் JMM, ஆம் ஆத்மி, MNF, JKPDP ஆகிய கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பட்கம் மற்றும் நக்ரோட்டா, ராஜஸ்தானில் உள்ள அந்தா, மிசோரமில் உள்ள டம்பா, ஜார்க்கண்டில் உள்ள காட்ஷிலா, தெலுங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ், ஒடிசாவில் நவ்படா மற்றும் பஞ்சாபில் உள்ள தரன் தரன் ஆகிய 8 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஜம்மு-காஷ்மீர்: பட்கம் தொகுதியில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆகா சையத் முந்தாசிர் மெஹ்தி 4,478 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. நக்ரோட்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் தேவ்யாணி ராணா 24,647 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ராஜஸ்தாண்: அந்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் ஜெயின் ''பய்யா'' 15,612 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 69,571 பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தெலுங்கானா: ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 15,612 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 69,571 பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஜார்க்கண்ட்: காட்ஷிலா தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் சோமேஷ் சந்திர சோரன் 38,601 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 10,4936 பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பஞ்சாப்: தரன் தரன் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஹர்மீத் சிங் சாந்து 12,091 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 42,649 பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஒடிசா: நவ்படா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜெய் தோலாகியா 83,748 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 1,23,869  பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மிசோரம்: டம்பா தொகுதியில் மிசோ தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் டாக்டர்.ஆர். லால்தாங்லியானா 562 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 6,981 பெற்று வெற்றி பெற்றுள்ளார்.