காஷ்மீர்,ஏப்.23- காஷ்மீர் தக்குதலில் பரப்பப்படும் வெறுப்பு பிரசாரங்களுக்கு எதிராகத் திரைக்கலைஞர் ஆண்ட்ரியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து மனமுடைந்துபோனேன்
நம் நாடு ஏற்கனவே பிரிவினையை நோக்கிச் செல்லும் நேரத்தில் , இச்சம்பவத்தில் பரப்பப்படும் குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களுக்கு நாம் இரையாகிவிடாமல் இருப்பதே குடிமக்களாகிய நமது கடமை என அவர் தெரிவித்துள்ளார்.