ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணன் உட்பட 3 பேர் மரணமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில், அப்பகுதியில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். அதேபோல் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராஜேந்திர பிரசாத், மனோஜ் குமார் மற்றும் லட்சுமணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதில் லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.