india

img

மர்மக்காய்ச்சல் காரணமாக ஹரியானாவில் 6 குழந்தைகள் பலி..

சண்டிகர் 
ஹரியானா மாநிலத்தின் பல்வால் மாவட்ட பகுதியில் உள்ளது சில்லி கிராமம். இந்த கிராம பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தது. 

ஆனால் எந்த வகையான காய்ச்சல் என்பதை அறிய முடியவில்லை. குறிப்பாக மர்ம காய்ச்சலால் கடந்த 2 வாரத்தில் மட்டும் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இறந்த குழந்தைகளின் உடற்கூராய்வில் கொரோனா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.    இதனால் மாவட்ட நிர்வாகம் அங்கு சிறப்பு முகாம் நடத்தி ஆய்வு செய்தது. சான்று எதுவும் கிடைக்காத நிலையில், தண்ணீர் மாசுபடுதலால் தொற்று உண்டாகி மர்ம காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.