headlines

img

அரசியல் அறுவடைக்கு வெறுப்பூட்டும் பேச்சுகள்

அரசியல் அறுவடைக்கு  வெறுப்பூட்டும் பேச்சுகள்

ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் பயங்கர வாதிகள்  நடத்திய மனிதநேயமற்ற, கோழைத்தன மான தாக்குதலை அனைத்து தரப்பினரும் கண்டித்துள்ளனர். அரசாங்கம் கூட்டிய அனை த்துக் கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளன. எனவே ஒன்றிய அரசு பஹல்காம் தாக்குதலின் அனைத்து கோணங்களையும் விசாரிக்க வேண்டும்.

“கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப் பட்ட பின்னர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் ஒன்றிய அரசின் கீழ் உள்ளன. இந்தக் கொ டூரமான தாக்குதலுக்குப் பொறுப்பான சக்திகளை  நீதியின் முன் நிறுத்துவதில் ஒன்றிய அரசு எந்த ஒரு முயற்சியையும் விட்டுவிடக்கூடாது. இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் இந்தியநாட்டின் எதிரி கள், குறிப்பாக காஷ்மீர் மக்களின் எதிரிகள்” என்ற குரல் வலுவாக எழுந்துள்ளது.  

இது ஒருபுறம் இருக்க பஹல்காம் சம்பவத்தை வைத்து நாடு முழுவதும் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பல்வேறு வலதுசாரி அமைப்புகள் முஸ் லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இது  பயங்கரவாத பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேடும் இழி வான செயலாகும். மதத்தை குறிப்பிட்டு பயங்கர வாதிகள் சுடவில்லை என்று உயிர் பிழைத்தவர்க ளும் அவர்களது உறவினர்களும் திரும்பத் திரும்ப சொன்ன போதிலும் மதத்தை அடையாளம் கண்டு தான் சுட்டார்கள் என்று பாஜகவினர் கூறிவருவது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான வெறுப்பூட்டும் பிரச்சாரம் ஆகும். 

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை  இழந்துள்ளார். அந்த பெண் விமான நிலையத்தில் பேட்டியளிக்கும் போது இந்து என்று  கேட்ட பின்னர்தான் பயங்கரவாதி சுட்டான் என்று கூறுமாறு அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி பகிரங்கமாகவே மிரட்டுகிறார். இது குறித்த காணொலி  சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. எனவே இவர்களது நோக்கம் பயங்கரவாதிகளை தண்டிப்பது அல்ல.

அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் கல்லூரிகளில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் உடனே வெளியேறவேண்டும் என்றும் இல்லை யென்றால் தாக்கப்படுவீர்கள் என்றும் ஆர்எஸ் எஸ் சார்பு  அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இத்தகைய சக்திகள் மீது மாநில அரசாங்கங்கள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசாங்கமும் பயங்கரவாதச் செயலுக்கு பதில் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்திருப்பது சரியல்ல. அது 24 கோடி மக்களின் உயிர்நாடியான ஒப்பந்தம் ஆகும். பயங்கரவாதிகளின் செயலுக்காக அப்பாவி மக்கள் தண்டிக்கப்படக்கூடாது. முழுமையான கோணத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.