நியூயார்க்.ஏப்.24- இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி காஷ்மீர் பகல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் காரணமாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் சூழல் ஏற்படும் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பேசுகையில்; பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைகளை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று நம்புவதாகவும் இரு நாட்டு உறவும் மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.