பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு சிபிஎம் அஞ்சலி
திருவாரூர், ஏப்.25- காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு, சிபிஎம் திருவாரூர் ஒன்றியம், நகரக் குழு சார்பாக, தபால் நிலையம் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.கோமதி, கே.பி.ஜோதிபாசு, நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரையா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பாக அமைந்துள்ள காமராஜ் சிலை அருகே மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், நகரச் செயலாளர் எம். கோபு ஆகியோர் தலைமை ஏற்றனர். அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் அஞ்சலி செலுத்தி இரங்கல் உரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன், சிபிஎம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன் மற்றும் ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.