tamilnadu

ஒன்றிய அரசை கண்டித்து மே 20 புதுச்சேரியில் முழு அடைப்பு

ஒன்றிய அரசை கண்டித்து  மே 20 புதுச்சேரியில் முழு அடைப்பு

துச்சேரி, ஏப்.25- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து மே 20 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்ய சிஐடியு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிஐடியு புதுச்சேரி மாநிலக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் பிரபுராஜ் தலை மையில் முதலியார் பேட்டையில் நடை பெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் சினுவாசன், நிர்வாகி கள் ரவிச்சந்திரன், கொளஞ்சியப்பன், மதிவாணன், ராமசாமி,ராஜ்குமார், தினேஷ்குமார்,பச்சமுத்து, வடிவேலு, மணிபாலன், கலியன் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறைந்தபட்ச கூலியை நிர்ணயம்

புதுச்சேரி என்.ஆர்.காங்., பாஜக  கூட்டணி அரசு  கடந்த 8ஆண்டுகளாக உயர்த்தாமல் உள்ள குறைந்தபட்ச ஊதி யத்தை தற்போது உள்ள விலைவாசிக்கு  ஏற்றார் போல் நிர்ணயம் செய்ய   வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆட்டோ தொழி லாளர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதி யின்படி ஆட்டோ செயலி,  சட்டவிரோத இருசக்கர வாகன நிலையங்களை தடை செய்தல், ரேபிடோ பைக் டாக்ஸியை செயலியை முடக்கம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது முதலமைச்சர்  உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர விற்பனை குழு தேர்தலை புதுச்சேரி நகராட்சி உடனடியாக நடத்திட வேண்டும்.

முழு அடைப்பு போராட்டம்

ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து  மே 20 ஆம் தேதி புதுச்சேரியில் சிஐ டியு சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து தொழி லாளர்களும் முழுமையாக பங்கேற்று வெற்றி பெற செய்வது என்று முடிவு கூட்டத்தில் செய்யப்பட்டது.