சிறு கனிமங்கள் சுரங்கத்திற்கு டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
விவசாயிகள் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை
கல் சுரங்கங்களில் இருந்து சிறு கனிமங்களை எடுப்பதற்கு கணினிமய ஸ்லிப்புகள் வழங்கவும், டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்தவும் தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள், சுற்றுச்சூழல் பாது காப்பு இயக்கம் மற்றும் சட்ட விரோத குவாரி தடுப்புக் குழு தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளது. இந்த மனுவில், “கல் குவாரிகளில் முறைகேடாக சுரங்கம் எடுப்பதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்த கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே. சிவப்பிரகாஷ் கூறுகையில்,”கல் சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் சிறு கனிமங்களை அளவிட மெட்ரிக் முறையை அமல்படுத்த தமிழ்நாடு அரசு அறிவித்ததை நாங்கள் வரவேற் கிறோம். இது கனிமங்கள் கொள்ளை யடிப்பதை தடுக்க உதவும். எனினும் தற்போது தமிழ்நாட்டில் 2,000 குவாரிகள் செயல்பாட்டில் உள்ளன. 6,000-க்கும் மேற்பட்டவை கனிமங்கள் எடுத்த பிறகு கைவிடப்பட்டுள்ளன. செயல்பாட்டில் உள்ள பெரும்பாலான குவாரிகள் தேவை யான அனுமதி இல்லாமல் இயக்கப்படு கின்றன. அவை சட்டவிரோதமாக இயக்கப்படுகின்றன. அதனால் தமிழ்நாடு சிறு கனிமங்கள் ஒப்படைப்பு சட்டம், 1959இன் கீழ் அரசு சொத்துக்களை கொள்ளையடிப்பவர் களுக்கு 15 மடங்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சுரங்கங்களைச் சுற்றி சிசிடிவி கேமராக் களை நிறுவி செயல்பாடுகளை கண் காணிக்க வேண்டும்” என அவர் கூறினார்.