மனித குலத்திற்கு எதிரான கொடிய நோய்!
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப் பட்டுள்ள கோழைத்தனமான தீவிரவாத தாக்கு தலில் 28 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த வன்முறை வெறியாட்டம் நம் அனைவரின் மன தையும் உலுக்கியுள்ளது. இது கடும் கண்டனத் திற்குரியது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நாட்டிற் கும், குறிப்பாக காஷ்மீர் மக்களுக்கும் எதிராக உள்ளவர்கள். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த தாக்குதலின் பின்புலத்தில் உள்ள அனைத்து கோணங்களையும் ஒன்றிய அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும். சுற்றுலா பகுதி களில் பாதுகாப்பு இல்லாமை தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தீவிரவாதம் ஒரு போதும் நிரந்தரத் தீர்வாகாது. அது வெறுப்பை யும், பிளவுகளையுமே சமூகத்தில் விதைக்கிறது. அது மனித குலத்திற்கே எதிரான ஒரு கருத்தியல். இத்தகைய வன்முறைச் செயல்களைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. இது மேலும் பிளவுகளுக்கும், வெறுப்புணர்ச்சிக்குமே வழிவகுக்கும்.
தீவிரவாதச் செயல்கள் நடைபெறும் போதெல்லாம், அவற்றை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்துடன் தொடர்புபடுத்தும் பழக்கம் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால் உண்மையில் தீவிரவாதத்திற்கு சாதி, மதம், இனம் என எந்த எல்லைகளும் கிடையாது. அது மனித குலத்திற்கே எதிரான கொடிய நோய். தனிமனிதர்கள் அல்லது குழுக்கள் இழிவான செயல்களை புரியும்போது, முழு மதத்தையோ சமூ கத்தையோ குற்றம் சாட்டுவது அறிவுடைமை அல்ல. தீவிரவாதிகளின் பெயரை மட்டும் பார்த்து ஒரு முழு மதத்தையே இழிவுபடுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது நீதியற்ற அணுகுமுறை.
பலவித கலாச்சாரங்களும், மதங்களும், இனங்களும் ஒன்றிணைந்து வாழும் நம் நாட்டின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. தீவிர வாதிகளின் நோக்கமே இந்த ஒற்றுமையைக் குலைப்பதுதான். பிளவை ஏற்படுத்துவதுதான். வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்தால், எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் வன்முறையின் மூலம் இறுதியில் வெற்றி பெற்றதாக இல்லை.
வன்முறை ஒருபோதும் நீடித்த அமைதி யைக் கொண்டு வந்ததில்லை. மாறாக, அது அழிவையும், துயரத்தையுமே பரிசாக அளித்துள் ளது. உண்மையான வெற்றி என்பது மக்களின் இதயங்களை வெல்வதில்தான் உள்ளது. மனித நேயத்தோடும், கருணையோடும் மக்களை அணுகுவதன் மூலமே நீடித்த அமைதியையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்ப முடியும்.
இந்த துயரமான நேரத்தில், நாம் அனை வரும் ஒன்றிணைந்து தீவிரவாதத்திற்கு எதிரா கக் குரல் கொடுப்போம். அமைதியையும், நல்லி ணக்கத்தையும் நிலைநாட்ட உறுதியேற்போம்.