india

img

விவசாயிகள் விரும்பாததை ஏன் திணிக்கிறீர்கள்...? அதிகாரத்தின் ஆணவம் உங்கள் தலைக்கு ஏறிவிட்டது... மோடி அமைச்சர் மீது ஆர்எஸ்எஸ் தலைவர் திடீர் பாய்ச்சல்...

புதுதில்லி:
புதிய வேளாண் சட்ட விவகாரத்தில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆணவத்துடன் செயல்படுவதாக ஆர்எஸ்எஸ்மூத்தத் தலைவர்களில் ஒருவரான ரகுநந்தன் சர்மா விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“அன்புள்ள நரேந்தர் ஜி, நீங்கள் இந்த அரசில் ஒரு பாகமாக உள்ளீர்கள். உங்கள் கடமை விவசாயிகளுக்கு உதவுவதாக இருக்க வேண்டும். உதவியே என்றாலும் தேவையில்லை எனும்போது, ஏன் நீங்கள் அதைச் செய்ய வேண்டும்?இப்போது பதவியின் அகம்பாவம் உங்கள்தலைக்குள் புகுந்துள்ளது. தற்போது எதுஅவசியம் என்பதை நீங்கள் ஏன் உணரமறுக்கின்றீர்கள். நாம் இவ்வாறு காங்கிரஸைப் போல பிடிவாதமான கொள்கைகளை கடைப்பிடிப்பது நமக்குப் பிடிக்காதஒன்று. சொட்டுச் சொட்டாக ஒழுகும் நீரால் பானை முழுமையாக காலி ஆகும். எனவே, நாம் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும்.தேசியத்தை பலமாக்கும் அனைத்தையும் நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் விலக்கப்படுவோம்.   நீங்கள் இதை அறிந்து அதன்படி செயல்படுவீர்கள்! என நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். உங்கள் கடின உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்கிறீர்கள் என்ற எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டால், அது உங்கள் மாயை நூறாண்டுக்கும் மேலாகப் பாடுபட்டே நாம் இன்று ஒரு தேசிய அரசை அமைத்துள்ளோம். இதற்காக ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர் என்பதை மறக்கக் கூடாது” என்றும் ரகுநந்தன் சர்மா விமர்சித்துள்ளார்.