ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கும் பெரும் சதி
பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) என்ற பெயரில் ஒரு பெரும் ஜனநாயக விரோத சதி நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு நேர் எதிரானவை ஆகும்.
2003-ம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டிய லில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை மட்டுமே இலக்கு வைத்து இந்த “சரிபார்ப்பு” நடவடிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக ஏராள மான உண்மையான குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இது ஒன்றிய பாஜக அரசின் ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வு என்பது தெளிவாகிறது.
குடியுரிமை சரிபார்ப்பின் போது ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். பாஸ்போர்ட், சாதி சான்றிதழ், நிரந்தர இருப்பிட ஆவணங்கள் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை பரவ லாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் வாக்கா ளர் சரிபார்ப்பின் போது மட்டும் இதை ஏன் நிராகரிக்க வேண்டும்?
இந்த நடவடிக்கை குடியுரிமை சட்டத்தின் 18-வது பிரிவுக்கு நேர் எதிரானது. பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பெறும் உரிமையை இது மறுதலிக்கிறது. 1950-ம் ஆண்டு அரசி யலமைப்பின் 5-வது பிரிவின் கீழ் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களது வழித்தோன்றல் களுக்கு உள்ள உரிமைகளை இது பறிக்கமுயல்கிறது.
1996-ம் ஆண்டில் இந்திரா சகானி வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியது: “பிறப்பின் மூலம் குடியுரிமை பெற்றவர்களிடம் குடியுரிமை யின் ஆதாரம் கேட்பது அவர்களின் மீது பழியும் குற்றமும் சுமத்துவதாகும்.” 1985-ம் ஆண்டில் இந்திரா பர்வால் வழக்கிலும் இதே கருத்து வலி யுறுத்தப்பட்டது. இந்த தீர்ப்புகளை மீறி நடக்கும் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது.
தேர்தல் ஆணையம் தனது எதிர் பிரமாணப் பத்திரத்தில் இந்த நடவடிக்கையை “கடுமையான மோசடி” என்று விவரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இது எவ்வளவு பெரிய முரண்பாடு! ஒருபுறம் மோசடி என்று ஒப்புக்கொண்டு, மறுபுறம் அதையே தொடர்வது எப்படி நியாயமாகும்?
குடியுரிமை சரிபார்ப்பின் பெயரில் நடக்கும் இந்த “கடுமையான மோசடி”யை உடனடியாக நிறுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் சேர்க்க வேண்டும். இது வெறும் பீகார் மாநிலத்தின் பிரச்சனை மட்டுமல்ல. இது முழு நாட்டின் ஜன நாயக அமைப்புக்கே எதிரான தாக்குதல். வாக்கு ரிமை என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். அந்த அடித்தளத்தையே அழிக்க முயலும் சக்திகளை விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும். பீகார் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் இந்த சதிக்கு எதிராக குரல் கொடுப்பது நமது அனைவரின் பொறுப்பு.