புதுதில்லி:
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர்கள் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மே மாதம் 13 ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவருக்கு மாலத்தீவு அரசு பயணத் தடை விதித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஜூலை 15 ஆம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட தெற்காசியநாடுகளை சேர்ந்தவர்கள் மாலத்தீவு களுக்கு வர அனுமதி வழங்கப்படும் என்று ஜனாதிபதி இப்ராகிம் முகம்மத் சோலிஹ் அறிவித்துள்ளார். கொரோனா சோதனையில் நெகடிவ் சான்றிதழ் மட்டும் இதற்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மாலத்தீவு சென்றுள்ளனர். முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பியுள்ள மிகவும் சிறிய நாடான மாலத்தீவு என்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளின் தொகுப்பு ஆகும். இந்தியர்களுக்கு முன்னதாகவே விசா தேவையில்லை. பயணம் செய்தாலே அங்கு 90 நாள்களுக்கான விசா வழங்கப்படும். அதற்காக ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங் களும் தேவை.