புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்தநிலையில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜெர்மனி அரசு நீக்கியுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனியின் நோய்தடுப்பு - பாதுகாப்பு அமைப்பான தி ராப்ர்ட் கோச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியா, ரஷ்யா, போர்ச்சுகல், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ்பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. இதனால், ஜெர்மன் நாட்டைச் சாராதவர்கள் ஜெர்மனியில் வசிப்பவர்கள், இந்த நாடுகளின் பயணிகள் தடையின்றி பயணிக்கலாம் என்று தெரிவித்துள் ளது.மேலும் அலுவல் மற்றும் வர்த்தகரீதியாக வரும் வெளிநாட்டவர்கள் கண்டிக்கப்பாக கொரோனா நெகட்டிவ் பரிசோதனை சான்றிதழ் தேவை. நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால், 5 நாட்கள் தனிமைப்படுத்திகொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருப்போர் தனிமைப்படுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.