புதுதில்லி:
மத்திய அரசு 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க மறுத்ததாலும், தட்டுப்பாடு காரணத்தினாலும் மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளன.
18 வயது முதல் 45வயதிற்கு உட்பட்டோருக் கான தடுப்பூசிகளை மாநிலஅரசுகளே கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறி, பொறுப்பை தட்டிக்கழித்துள்ளது என்று அரசியல் கட்சியினர் சாடுகின்றனர்.இந்த நிலையில் அமெரிக்காவின் தடுப்பூசி நிறுவனமான மாடர்னா பஞ்சாப் மாநிலத்திற்கு தடுப்பூசி வழங்க முடியாது எனக் கூறிவிட்டது. அவர்களுடைய கொள்கை அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளது. அவர்கள் மத்திய அரசுடன் மட்டும்தான் ஒப்பந்தம் வைத்துக் கொள்வார்களாம். எந்தவொரு மாநில அரசுகள் மற்றும் தனியாருடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளமாட்டார்களாம்’’ என்று பஞ்சாப் மாநில தடுப்பூசிக்கான கண்காணிப்புஅதிகாரி தெரிவித்துள்ளார்.