india

img

பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்குக... பிரதமருக்கு விவசாய அமைப்புகள் கடிதம்....

புதுதில்லி:
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடா்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு விவசாய அமைப்புகள்  கடிதம் எழுதியுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் மத்திய மோடி அரசுகொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி தில்லி மாநிலஎல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் 6 மாதங்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி விவசாயிகளின் நலனில் அக்கறைகொள்ளாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கானசெயல்பட்டு க்கொண்டிருக்கிறார் என்று விவசாயிகள் சாடுகின்றனர்.

போராட்டம் தொடங்கி 6 மாதங்களாகவுள்ளதை குறிக்கும் வகையில் மே 26-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு அறிவித்துள்ளது. அன்றைய தினம் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் வீடுகள், வாகனங்கள், கடைகளில் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்த நிலையில்,  3 வேளாண் சட்டங்கள் தொடா்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று அந்தச் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் அடங்கிய சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.