புதுதில்லி:
தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், இந்தியாவின் அதிகாரப்பூர்வ குடியரசுத் தலைவர் மாளிகையாக விளங்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் 14 முதல் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்காக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் மாளிகையையும், குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் மீண்டும் திறக்கப்படுகின்றன.