ஒன்றிய அரசின் அமைச்சரவையில் புதிதாக 43 பேர் இணைக்கப்பட்டு மெகா அமைச்சரவையாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து நையாண்டி செய்யப்பட்டு வருகிறது. சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தமது டுவிட்டர் பதிவில் “நோ யூஸ் பாஸ்! ஆப்ரேட் பண்ணதெரியாதன் கையில் 40 கம்ப்யூட்டர் இருந்தா என்ன? அதோடு இன்னொரு 43 கம்ப்யூட்டர் சேர்ந்தா என்ன?” என்று கூறியுள்ளார். அதற்கு பின்னூட்டமாக பலர் இட்டுள்ளபதிவுகளில், “நாறிப் போன மீனை நாற்பது தடவை மாற்றி மாற்றி அலசி குழம்பு வச்சாலும் அந்த குழம்பு விளங்கப் போவதில்லை” என்றும். “ஏற்கெனவே ஜெயரஞ்சன் ஒரு விவாதத்தில் பேசும் போது அறுக்க மாட்டாதவன் கையில 58 அருவா என்று கிராமத்தில் சொல்வாங்க எனக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது என்றும், “நம்பிக்கையான பினாமிகள் 43 பேர்” என்றும் விமர்சனக் கனைகளை முன்வைத்துள்ளனர்.