india

img

பாஜக தலைவர்களின் செய்திகள் திரித்துக் கூறப்பட்டவை.... மேலும் 5 பேருக்கு முத்திரை குத்தியது டுவிட்டர்....

தில்லி:
இந்தியாவின் மதிப்பைக்குறைக்கவும், பிரதமர் மோடியின் பிம்பத்தை சிதைக்கவும், சர்வதேச ஊடகங்களுடன் கூட்டுச்சேர்ந்து காங்கிரஸ் கட்சி சதியில் ஈடுபட்டுள்ளது என்று கூறி, கைச்சின்னத்துடன் கூடிய‘டூல்கிட்’ (வழிகாட்டுதல்) ஆவணம் ஒன்றை பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

பாஜக தேசியத் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் உள் ளிட்டோரும் அந்த டூல்கிட் செய்தியை, அப்படியே தங்களின் சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர்.ஆனால், பாஜகவினரின் குற்றச்சாட்டை மறுத்த காங்கிரஸ் கட்சி, இந்த ‘டூல்கிட்’ போலியானது, பாஜக தலைவர்களே இதனை உருவாக்கியுள்ளனர் என்று புகார் தெரிவித்தது. இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கும் அது கோரிக்கைவிடுத்தது.
டுவிட்டர் நிறுவனமும் காங்கிரசின் புகாரிலுள்ள நியாயத்தை உணரவே, பாஜகசெய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவின் சர்ச்சைக்குரிய அந்த டூல்கிட் தொடர்பான பதிவை, ‘திரித்துக் கூறப்பட்ட செய்தி’ (Manipulated) என்றுடுவிட்டர் நிறுவனம் முத்திரை குத்தியது.ஆனால், டுவிட்டரின் இந்தநடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என்று பாஜக விமர்சித்தது. திரித்துக் கூறப்பட்டவை என்ற முத்திரையை நீக்க வேண் டும் என்றும் வலியுறுத்தியது.

இதனிடையே, பாஜகவின் ப்ரீத்தி காந்தி, ஆந்திரப்பிரதேச பாஜக தலைவர் சுனில் தியோதர், சாரு பிரக்யா, தில்லிபாஜக தலைவர் குல்ஜீத் சிங்சாகல், எம்.பி. வினய் சஹஸ்ரூபித்தே ஆகிய மேலும் 5 பாஜக தலைவர்களின் ‘டூல்கிட்’ தொடர்பான பதிவுகளிலும் ‘திரித்துக் கூறப்பட்டவை’ (Manipulated) என்று டுவிட்டர்நிறுவனம் முத்திரை குத்தியுள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், போலி ‘டூல்கிட்’ வெளியிட்டு, மோசடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ்,மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜக செய்தித் தொடர் பாளர் சம்பித் பத்ரா ஆகிய 4 பேர் மீது ராஜஸ்தான் மாநிலம்ஜெய்ப்பூர் பஜாஜ் நகர் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.