புதுதில்லி:
இந்தியாவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் கேடிலா தயாரித்துள்ள தடுப்பூசியான சைகோவ்-டி விரைவில் குழந் தைகளுக்காகக் கிடைக்க வாய்ப்புள்ளது.’சைகோவ்-டி’-யின் அவசரகாலப் பயன்பாட்டிற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் (டி.ஜி. சி.ஐ) அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி, அடுத்த சில வாரங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் ஒப்புதலைப் பெறலாம். இதன் மூலம் சைகோவ்-டி உலகின் முதல் டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்து என்ற பெருமையைப் பெறக்கூடும்.கடந்த சனிக்கிழமையன்று இந்தத் தடுப்பு மருந்து வெளியாவது தொடர்பான தரவுகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தபின், ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சைகோவ்-டி தடுப்பு மருந்துகிடைக்கும் என்று இந்திய அரசு தெரிவித்தது.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஷர்வில் படேல், இது, 28000 தன்னார்வலர்களுக்கு அளித்து மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது, இது நாட்டின் மிகப்பெரிய அளவிலான மருத்துவப் பரிசோதனையாகும். இந்த மருத்துவப் பரிசோதனையில் 12 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் உட்பட அனைத்து வயதினரும் ஈடுபடுத்தப்பட்டனர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பி.எல் ஷெர்வால், இந்தத் தடுப்பு மருந்து தயாரிக்கும் முறையை விளக்குகிறார்.“மனித உடலில் டி.என்.ஏ மற்றும்ஆர்.என்.ஏ ஆகிய இரண்டு வகையான வைரஸ்களின் தாக்குதல்கள் பற்றி பேசப்படுகிறது. கொரோனா வைரஸ் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும், இது ஒற்றை இழை( Single Stranded) வைரஸ் ஆகும். டி.என்.ஏ இரட்டை இழையுடையது. ஒரு மனித உயிரணுவுக்குள் டி.என்.ஏஉள்ளது. எனவே நாம் அதை ஆர்.என்.ஏவிலிருந்து டி.என்.ஏவாக மாற்றும்போது, அதன் நகலை உருவாக்குகிறோம். இதற்குப் பிறகுஇது இரட்டை இழைகளாக மாறி,இறுதியாக அது டி.என்.ஏ வடிவத்தில் வடிவமைக்கப்படுகிறது.டி.என்.ஏ வகை தடுப்பு மருந்து மிகவும் சக்திவாய்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. பெரியம்மை முதல்ஹெர்பெஸ் போன்ற பிரச்சனைகளுக்கு இப்போது வரை டி.என்.ஏ தடுப்பூசி தான் வழங்கப்படுகிறது.இந்தத் தடுப்பூசி 28 நாட்கள் இடைவெளியில் மூன்று டோஸ்களில் வழங்கப்படும். அதனாலேயே, இதன்திறனைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று டாக்டர் ஷெர்வால் கூறுகிறார்.
“தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு, அந்த நபருக்குஎவ்வளவு நோய் எதிர்ப்பு சக்திகூடியுள்ளது என்பதைக் கண்டறிந்து, போதுமான திறன் உருவாகாத பட்சத்தில், இரண்டாவது மற்றும்மூன்றாவது அளவுகள் வழங்கப்படுகின்றன.” என்று அவர் விளக்குகிறார்.“முதல் டோசுக்குப் பிறகு, இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்கள் பூஸ்டர்களாகச் செயல்படுகின்றன. இதனால் ஆண்டிபாடிகள் எனப்படும் எதிர்ப்பான்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். இதனால் நீண்ட காலத்திற்கு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதுஎன் கருத்து” என்று அவர் விவரிக்கிறார்.நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர்என்.கே. அரோரா”சைடஸ் கேடிலாவின் சோதனை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக நாங்கள் அறிகிறோம். அதன் முடிவுகளை சேகரித்து அவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கும் செயல்முறை, நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும். ஜூலைஇறுதிக்குள் அல்லது ஆகஸ்டு மாதத்தில், 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.