தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனா நோய்த் தொற்றுக்கு தஞ்சையைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்திய அள விலும், மாநில அளவிலும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1938ஆக உள்ளது. சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 221ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் நான்கு மடங்காக உயர்ந்துள் ளது. 13 மாவட்டங்களில் மட்டுமே கொரோ னா கண்டறியப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்படும் என்றும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சோதனைகள் அதிகரிக்கப்படுவதும், இதுவரை தடுப்பூசி ஒரு தவணை கூட போட்டுக் கொள்ளாத வர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுவதும், இரண்டாவது தவணையை முழுமையாக பூர்த்தி செய்வதும், மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் அனைவருக்கும் போடப் படுவதை உறுதி செய்வதும் அவசியமாகும்.
மாநில அரசு பல்வேறு சிறப்பு முகாம்களை நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னு ரிமை அளித்தது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைந்திருந்த காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஆர்வமும் குறைந்திருந்தது. மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் தடுப்பூசி முகாம்கள் கூடுதலாக்கப்படவேண்டும். 2021 ஆகஸ்ட் நிலவரப்படி தமிழகத்தில் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 9 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண் டுள்ளதாகவும், முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 16 லட்சம் பேர் இரண்டா வது தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் அதிகபட்சமாக சுமார் 1 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைக ளில் முழுவீச்சில் ஏற்பாடுகள் நடைபெற வேண்டும். கடந்த காலத்தில் ஏற்பட்ட அவலமான அனுபவங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது. கொரோனா தொற்று கண்டுள்ளவர்கள் வீடு தனி மைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமே தீர்வாகாது. அவர்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பெருமளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் இந்நோய் சமூகப் பரவலாக தற்போது மாறுவதற் கான வாய்ப்பு குறைவு. எனினும் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் அனைத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிவாரண உதவிகள் வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.