tamilnadu

img

“காய்ச்சல், சளி அறிகுறி... அலட்சியம் வேண்டாம்”

சென்னை,ஜூன் 16- “பொதுமக்கள் காய்ச்சல், சளிக் கான அறிகுறி அல்லது தொண்டை தொடர்பான பிரச்சனைகள் போன்ற உடலில் சிறிய அளவு பாதிப்பு  ஏற்பட்டாலும் உடனே மருத்துவ மனைக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தாம்பரம் நெஞ்சக மருத்துவமனை யில் தயாராக உள்ள கொரோனா நோய் தடுப்பு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர் கூறிய தாது:- இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 9 மாதங்கள் நிறைவடைந்திருந்தால், நிச்சயம் 3-வது தவணை தடுப்பூ சியை செலுத்திக் கொள்வது அவசி யம். 3 தவணை தடுப்பூசியும் செலுத்தி யவர்கள் இந்த கொரோனா பாதிப்பு களில் இருந்து நிச்சயம் மீளலாம். உல கமே இதற்கு சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு,  தடுப்பூசி மட்டும்தான் தீர்வு. அதே போல் தற்காப்பு நடவடிக்கைகளாக இருக்கும் முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடிப் பது உள்ளிட்டவைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தஞ்சாவூரில் பலியான பெண்ணு க்கு 18 வயது. அவருக்கு ஏற்கெனவே கடந்த இரண்டு மூன்று நாட்களாக கூடுதலாக காய்ச்சல் இருந்தும் வீட்டி லேயே இருந்துள்ளார். எனவே, பொதுமக்களுக்கு அரசின் வேண்டு கோள், காய்ச்சல், சளிக்கான அறிகுறி,  அல்லது தொண்டை தொடர்பான பிரச்சனைகள் இதுபோன்ற புதிதாக உடலில் மாற்றம் ஏற்படும்போது உடன டியாக மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெற வேண்டும். சில நாட்களில் சரியாகிவிடும் என்று வீட்டிலேயே இருந்து தப்புக் கணக்கு போட வேண்டாம். தஞ்சை யில் அப்படிதான் அந்த பெண், வீட்டிலேயே இருந்து, பின்னர் தனியார் மருத்துவமனை சென்று இறுதி யாக அரசு மருத்துவமனை வந்து உயிரிழந்துள்ளார். உடலில் சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்து வர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.